A solemn commemoration was held today to mark the death anniversary of S. J. V. Chelvanayakam, fondly remembered as “Thanthai Selva,” at his gravesite.
The event brought together clergy, community leaders, and members of the public who gathered to pay their respects and honour his enduring legacy of non-violence, justice, and commitment to the rights and dignity of his people. Floral tributes were laid, and prayers were offered in remembrance of his life and service.
The Bishop of the Jaffna Diocese of the Church of South India Rt.Rev.Dr.V.Pathmathayalan graced the occasion with his presence, alongside the Diocesan Secretary, Rev. Sathees Daniel. Their participation reflected the Diocese’s continued respect for Thanthai Selva’s principled leadership and his contribution to the social and political history of Sri Lanka.
The gathering concluded with a renewed call to uphold the values he stood for, inspiring future generations to pursue peace, unity, and justice in society.
“தந்தை செல்வா” என அழைக்கப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகம், அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் ஒரு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சமூக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, அஹிம்சை, நீதி மற்றும் தமது தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அவரது உறுதியான பணியை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, அவரது வாழ்வு மற்றும் சேவையை நினைவுகூர்ந்து இறை வேண்டல்களும் ஏறெடுக்கப்பட்டன.
தென் இந்திய திருச்சபை யாழ் பேராயர் Rt. Rev. Dr. வி. பத்மதயாளன் அவர்களும் ஆதீன செயலாளர் அருட்பணி சதீஸ் டானியல் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தந்தை செல்வாவின் கொள்கைமிக்க தலைமையையும், இலங்கையின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் அவர் செய்த பங்களிப்பையும் தென் இந்திய திருச்சபை யாழ் ஆதீனம் தனது என்றும் நினைவு கூறுகின்றது.
தந்தை செல்வா நிலைநிறுத்திய விழுமியங்களைக் காத்து, வருங்கால சந்ததியினரைச் சமூகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் நீதியைப் பின்தொடர ஊக்குவிக்கும் ஒரு புதுப்பிக்கப்பட்ட அழைப்புடன் இன்றைய வணக்க நிகழ்வு கூட்டம் நிறைவடைந்தது.


