JDCSI குருமார்களுக்கும் பொருளாளர்களுக்குமான கலந்துரையாடல்
Discussion Meeting for JDCSI Clergy and Treasurers
A special discussion meeting for the clergy and treasurers of the Jaffna Diocese of the Church of South India (JDCSI) was recently held at the Diocesan Auditorium under the chairmanship of Bishop Rt. Rev. Dr. V. Pathmathayalan.
During the meeting, extensive discussions were held on the fundamental values of Christian life, church discipline, dedication, accountability, and administrative effectiveness. The Bishop particularly emphasized that Christians are called not to a life of moral compromise, but to a life of holiness and purity.
He pointed out that although the world is changing rapidly, the Word of God never changes, and stressed the importance of believers remaining steadfast in godliness and integrity amidst various challenges and pressures.
Addressing the clergy and treasurers involved in church ministry and administration, the Bishop noted that they should serve as role models to others through their lives. He affirmed that Jesus Christ is the supreme example for the Christian community and that following His way of life is the true Christian calling.
Furthermore, the importance of acting responsibly in matters relating to church financial management, accounting responsibilities, ethical standards, and administrative structures was highlighted.
As the first six months of 2026 draw to a close, the Bishop called upon everyone to evaluate their contribution to the growth of the Diocese through self-examination and to continue serving with dedication in a ministry centered on the Lord.
He also spoke about the need for having high aspirations and a long-term vision for the future growth of the Church, emphasizing that the Church must carry forward its mission under the guidance of the Holy Spirit.
தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் (JDCSI) குருமார்களுக்கும் பொருளாளர்களுக்குமான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ஆதீன கேட்போர் கூடத்தில் பேராயர் பேரருட்கலாநிதி V. பத்மதயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை விழுமியங்கள், திருச்சபை ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, கிறிஸ்தவர்கள் ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்காக அல்ல, மாறாக தூய்மையும் பரிசுத்தமும் நிறைந்த வாழ்க்கைக்காகவே அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை பேராயர் வலியுறுத்தினார்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருந்தாலும், கடவுளுடைய வார்த்தை ஒருபோதும் மாறுவதில்லை என்பதையும், பல்வேறு சவால்கள் மற்றும் அழுத்தங்களின் மத்தியிலும் விசுவாசிகள் தேவபக்தியிலும் நேர்மையிலும் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருச்சபை வாழ்க்கையிலும் நிர்வாகப் பொறுப்புகளிலும் ஈடுபட்டுள்ள குருமார்களும் பொருளாளர்களும் தங்களது வாழ்க்கையின் மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட பேராயர், இயேசு கிறிஸ்துவே கிறிஸ்தவ சமூகத்தின் உயர்ந்த முன்மாதிரி என்றும், அவருடைய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதே உண்மையான கிறிஸ்தவ அழைப்பு என்றும் தெரிவித்தார்.
மேலும், திருச்சபையின் நிதி நிர்வாகம், கணக்குப் பொறுப்புகள், ஒழுக்க முறைமைகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பிலும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் நிறைவடையும் இந்நேரத்தில், திருமண்டலத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சுயபரிசோதனையுடன் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், ஆண்டவரை மையப்படுத்திய ஊழியப் பயணத்தில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பேராயர் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், திருச்சபையின் எதிர்கால வளர்ச்சிக்காக உயர்ந்த இலட்சியங்களையும் தூரநோக்குப் பார்வையையும் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் திருச்சபை தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
*JDCSI குருமார்களுக்கும் பொருளாளர்களுக்குமான கலந்துரையாடல்*