+94 21 225 0826

The members of Adappankulam Church recently met with Evangelist Bro. D. Nesakumar to discuss the ongoing ministries and future programmes of the church. The meeting provided an opportunity for fellowship, sharing, and planning for the spiritual and communal growth of the congregation.

On the same occasion, the church members joined hands with personnel from the Sri Lankan Security Forces in a Shramadana (community voluntary service) programme to clean and maintain the church premises. The church compound, which also serves as the premises for the preschool, was thoroughly cleaned and beautified through this collaborative effort.

The Jaffna Diocese expresses its sincere appreciation to Evangelist Bro. D. Nesakumar, the church members, and the Sri Lankan Security Forces for their dedication, cooperation, and commitment to maintaining the church environment and strengthening community relationships. Such initiatives reflect the spirit of unity, service, and stewardship that enrich both the church and the wider community.

அடப்பன்குளம் திருச்சபையில் ஆலோசனைக் கூட்டமும் சிரமதானப் பணியும் சிறப்பாக நடைபெற்றது

அடப்பன்குளம் திருச்சபை உறுப்பினர்கள் அண்மையில் சுவிசேஷகர் திரு. டி. நேசகுமார் அவர்களைச் சந்தித்து, திருச்சபையின் தற்போதைய மற்றும் எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். இக்கலந்துரையாடல், திருச்சபையின் ஆவிக்குரிய மற்றும் சமூகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பயனுள்ள முறையில் இடம்பெற்றது.

அதேவேளை, அடப்பன்குளம் திருச்சபை வளாகத்திலும், முன்பள்ளி இயங்கிவரும் வளாகத்திலும் தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணி திருச்சபை உறுப்பினர்களும் இலங்கை பாதுகாப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்டனர். இந்தப் பணியின் மூலம் திருச்சபை மற்றும் முன்பள்ளி வளாகம் சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்கிய சுவிசேஷகர் திரு. டி. நேசகுமார் அவர்கள், திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு யாழ் ஆதீனம் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறான கூட்டு முயற்சிகள், ஒற்றுமை, சேவை மனப்பான்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதோடு, திருச்சபை மற்றும் சமூகத்தின் நல்லுறவை மேலும் வலுப்படுத்துகின்றன.