+94 21 225 0826
தென் இந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் பொதுநிலையாருக்கான திருமறைப் பயிற்சி வகுப்புகள் கொழும்பு பிராந்தியத்தில் சிறப்பாக நடைபெற்றன. இவ்வகுப்புகளில் கொழும்பு பிராந்திய திருச்சபைகளைச் சேர்ந்த திருமறையைக் கற்பதில் ஆர்வமுள்ள பொதுநிலையார் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி வகுப்புகளில் திருமறை அறிமுகம், பழைய ஏற்பாட்டு அறிமுகம், புதிய ஏற்பாட்டு அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் கற்பிக்கப்பட்டன. திருமறையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், கிறிஸ்தவ விசுவாசத்திலும் திருச்சபை வாழ்விலும் திருமறையைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கும் இப்பயிற்சிகள் பயனுள்ளதாக அமைந்தன.
திருமறை அறிவை வளர்த்துக்கொண்டு, தங்கள் திருச்சபை மற்றும் சமூகத்தின் மத்தியில் சிறப்பாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பாகவும் இவ்வகுப்புகள் அமைந்தன