விடுமுறை வேதாகமப் பாடசாலை – முதல் நாள் சிறப்பாக நிறைவு
தென்னிந்தியத் திருச்சபை - யாழ் ஆதீனம் (JDCSI) – விடுமுறை வேதாகமப் பாடசாலை 2026 இன் முதல் நாள் நிகழ்வுகள் இன்று சிறப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்றன.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, தென்னிந்தியத் திருச்சபை – தூத்துக்குடி நாசரேத் ஆதீனத்தின் “பாலியர் நண்பன்” குழுவில் பங்குபற்றிய வளவாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பான பங்களிப்பிற்கும், சிறார்களின் ஆன்மீக மற்றும் ஆளுமை வளர்ச்சிக்காக வழங்கிவரும் சேவைக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
முதல் நாளின் நிகழ்வுகளில் பிள்ளைகள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டு, வேதாகமப் போதனைகள், பாடல்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள் மூலம் பயனடைந்தனர். மகிழ்ச்சியான சூழலில் இறைவார்த்தையை கற்றுக்கொண்டு, புதிய அனுபவங்களுடனும் ஆசீர்வாதங்களுடனும் பிள்ளைகள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
இவ்விடுமுறை வேதாகமப் பாடசாலையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளை, 12 ஆகஸ்ட் 2026 புதன்கிழமை, காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.
பிள்ளைகளின் விசுவாச வளர்ச்சிக்கும், கிறிஸ்தவ விழுமியங்களை அவர்களின் வாழ்வில் வேரூன்றச் செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடசாலை தொடர்ந்து ஆசீர்வாதமான வாய்ப்பாக அமைய இறைவனை வேண்டுகிறோம்.
“வெற்றி பெறு” – கிறிஸ்துவில் வெற்றி பெறுவோம்!








