+94 21 225 0826

தென்னிந்தியத் திருச்சபை யாழ் ஆதீன குருமாருடைய குடும்ப ஞான ஒடுக்க முதல் நாள் அமர்வுகள் சிறப்புற நடைபெற்றன. பணி நோக்கத்தையும் ஆண்டவரின் உடலாகிய திருச்சபையின் நோக்கம் நிறைவேற தனிக் குடும்பங்களின் சாட்சிய வாழ்வு எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்ற சாராம்சத்தில் சிந்திக்கப்பட்டது சிறப்புக்குரிய விடயமாக அமைந்தது.

ஊழிய குடும்பங்களின் ஞான ஒடுக்க இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. திருமறையை ஒரே பார்வையில் இலகுவாக புரிந்துகொள்வது எப்படி என்று பிள்ளைகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டனர். ஊழியக் குடும்பங்களின் பரிசுத்த வாழ்வு திருச்சபையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது ஆணித்தரமாக எடுத்துக் காட்டப்பட்டது.
மாலை வேளை பாடல்கள், நடனங்கள், நகைச்சுவை நிறைந்த கலை நிகழ்வுகளினால் அனைவரும் மகிழ்ந்திருந்தனர்.